க்ளீன் ஆனது மண்முனை வடக்கு பிரதேச செயலகம்!!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  செயிரி வார (ஒழுங்கே ஒளி) நிகழ்வுகளானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேசசெயலகத்தில் இம் மாதம் முதலாம் திகதி முதல்    நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் "க்ளின் சிறிலங்கா " தேசிய திட்டத்தின் ஒரு விசேட வேலைத்திட்டமாக இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களை புத்துயிர் பெறச் செய்வதற்கும், பொதுச் சேவைத் துறையில் செயல்திறனை அதிகரிப்பதற்கு செய்ரி வாரமானது இம் மாதம் 01 திகதி முதல் 04 திகதி வரை நடைமுறைப்படுத்த பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. 

பொது நிருவாக , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினூடாக  அரச நிறுவனங்களில் காணப்படும் தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் காண்பது மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றுதல், இலத்திரனியல் கழிவுகளை அகற்றுதல் போன்ற பல விடயங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அரச நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் சுதந்திரமாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கு ஏற்ற சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல் பலன் தரு மரங்களை நடுதல் போன்ற பல நோக்கில்  இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் போது செய்ரி வாரம் தொடர்பான விழிப்புணர்வுகளை உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டி கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்  பொது மக்களுக்கான சேவைகளை இடையூறு இன்றி வழங்கி செய்ரி வார பொறுப்புக்களையும் தாங்கி எமது உத்தியோகத்தர்கள் முதல் நாளிலேயே சிறப்பாக செயற்பட்டனர். அவர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் ஒற்றுமை இத் திட்டத்தின் வெற்றிக்கு உயிர் கொடுத்ததுடன்  இத்திட்டத்தினை நான்கு நாட்கள் மட்டும் இதனை மட்டுப்படுத்தாது இத்திட்டத்தினை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்களான திருமதி சுபா சதாகரன், திருமதி.லக்சன்யா பிரசந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர், கங்காதரன் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

























Powered by Blogger.