அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட "மலையக சிறார்களின் கல்வி வாழ்விற்கு ஒளியேற்றுவோம்" - மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் நிவாரணப்பணி!!
எமது நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் மண் சரிவு என்பவற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டு நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் "மலையக சிறார்களின் கல்வி வாழ்விற்கு ஒளியேற்றும்" நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள், மீயுயர் பீட உறுப்பினர்கள், பிரதான இணைப்பாளர்கள், இணைப்பாளர்கள் உள்ளிட்ட அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுமாக இணைந்து நாங்கள் ஒவ்வொருவரும் எம்மால் இயன்றளவு கற்றல் உபகரணங்களை வழங்கியும், சேகரித்தும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கிவைப்பதன் ஊடாக அரசாங்கத்தின் கல்விக்கான நிவாரண சுமையினை எம்மால் இயன்றளவு குறைக்கும் நோக்கில் இன்று (06) திகதி இடம்பெற்ற எமது மீயுயர் பீட விசேட சந்திப்பின் போது தீர்மானத்தை எட்டியுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய உ.உதயகாந்த் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த விடையம் தொடர்பாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அத்தோடு எமது அமைப்புடன் இணைந்து இப்பாரிய கைங்கரியத்திற்கு வலுச்சேர்க்க ஆர்வமுள்ள தாங்கள் அல்லது தங்களது அமைப்பும் எம்மை தொடர்புகொண்டு தங்களால் இயன்ற கற்றல் உபகரணங்களை அல்லது அதற்கான நிதி உதவிகளை தாராள மனதுடன் வழங்கிவைக்க முடியும் என்பதை அறியத்தருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தங்களது உதவிகளை வங்கியில் வைப்பிலிட விரும்பினால், வைப்பிலிட்ட பற்றுச்சீட்டினை தலைவர், செயலாளர் அல்லது பொருளாளரின் WhatsApp இலக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன், எதிர்வரும் 20.12.2025 திகதிக்கு முன்னர் உங்களது உதவிகள் எமக்கு கிடைக்கப்பெறுமாயின், எதிர்வரும் 23.12.2025 திகதி பாதிக்கப்பட்ட சிறார்களிடம் குறித்த உதவிகளை தம்மால் கொண்டு சேர்க்க முடியும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
வங்கி கணக்கு இலக்கம் :-
President,
Batticaloa District Social Welfare centre of Justices of the Peace
0730-33525898-101
Seylan Bank - Batticaloa Branch
உதவிகளை வழங்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் :-
தலைவர் :- அகில இலங்கை சமாதான நீதிவான் "சாமஸ்ரீ தேசமானிய" திரு.உ.உதயகாந்த் (JP) +94776027537
உபதலைவர் :- "தேசகீர்த்தி, சமூகஜோதி" ஜனாப்.எம்.வை.ஆதம் +94776179582
செயலாளர் :- "தேசகீர்த்தி, சமூகஜோதி" திரு.ரீ.லெட்சுமிகாந்தன் (JP) +94776016218
பொருளாளர் :- ஆயுள்வேத வைத்தியர் "தேசகீர்த்தி, சமூகஜோதி" சபாரெத்தினம் சுதர்சன் +94776219933
உபசெயலாளர் :- கலாநிதி அருணாசலம் செல்வேந்திரன் +94773618402
