16 நாள் வாத செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று இன்று இடம் பெற்றது.
SEDF நிறுவனமும் Berendina நிறுவனமும் இணைந்து நடாத்திய மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நடாத்திய 16 நாள் வாத செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வானது "அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர ஒன்றுபடுதல்" எனும் தொனிப்பொருளில் இன்று 25.11.2025 திகதி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.அருணாளினி சந்திரசேகரம் அவர்கள் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
16 நாள் வாதம் தொடர்பான வரலாறு பற்றிய அறிமுகத்தினை பெண் உரிமை செயற்பாட்டாளர் திருமதி.சுபத்திரா ஜெயகுமார் வழங்கியதுடன், குறித்த நிகழ்விற்கு வளவாளராக சட்டத்தரணி ரீ.தவப்பிரியா கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையினை கொண்டுவருதல் எனும் தலைப்பில் வளவாண்மை மேற்கொண்டிருந்தார்.
SEDF நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி.ஜேசுதாசன் ரஜிதா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரெண்டீனா நிறுவனம் தொடர்பான விளக்க உரையினை திருமதி.சுமேதா நிகழ்த்தியிருந்தார்.
இதன் போது இளைஞர்கள், சிறுவர், பெண்கள் மற்றும் மகளீர் சார்ந்து பிரதேச செயலக ரீதியாகவும், மாவட்ட மட்டத்திலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தெளிவூட்டப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் SEDF நிறுவனத்தின் உறுப்பினர்கள், Berendina நிறுவனத்தின் உறுப்பினர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
SEDF நிறுவனமானது சேவை நாடும் பெண்களுக்கான சட்ட உதவிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
