மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் மனிதநேய நிவாரண பணி இன்று (03) திகதி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவருமாகிய தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அவர்களது தலைமையில் குறித்த நிவாரணப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களிடம் கையளிக்கப்பட்ட சுமார் 3 இலட்சம் பெறுமதியான 60 நிவாரணப் பொதிகள் இன்றைய தினமே பிரதேச செயலகத்தில் வைத்து வெள்ள அனர்த்தத்தினால் தொழில் பாதிப்பிற்குள்ளான பெண் தலைமை தாங்கும் குடும்பங்களிற்கும், தெரிவு செய்யப்பட்ட தகுதியான சில குடும்பங்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் மனித நேய பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நிதியின் மூலமாக குறித்த மனிதநேய பணி மேற்கொள்ளப்பட்டதுடன், குறித்த மனிதாபிமான பணியினை சம்மேளனத்தின் செயலாளர் பொறியியலாளர் த.அன்ரன் உள்ளிட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்களும் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












