சிவன் அருள் கணினி தொழிற்பயிற்சி நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

சிவன் அருள் கணினி தொழிற்பயிற்சி நிலையத்தில் NVQ Level -03 ICTT மற்றும் NVQ Level -04 Computer Graphic Designer ஆகிய பாடநெறிகளை பயின்று அரச அங்கீகாரம் பெற்ற NVQ தர சான்றிதழ்களை பெற தகுதி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது  அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக 2025/11/21 (வெள்ளிக் கிழமை) நடைபெற்றது.

சிவன் அருள் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் Dr.ஜே.நமசிவாயம்  அவர்களின் தலைமையிலும், சிவன் அருள் பவுண்டேசன் அமைப்பின் செயலாளர் கு.பவளசிங்கம் (வாணன்) அவர்களின் ஒழுங்குபடுத்தலிலும்  இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவர்களும் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் இந்நிகழ்வில் சிவன் அருள் பவுண்டேசன் அமைப்பின் ஆலோசகரும் பொறியியலாளருமான ரீ.நாகதேவகுமார், சிவன் அருள் ஹோப் அமைப்பின் முகாமையாளர் கமலமூர்த்தி, ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் இராமகுட்டி, Sward நிறுவனத்தின் ஸ்தாபகர் சேனாதிராஜா, சிவன் அருள் பவுண்டேசன் அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர் க.கௌசிகன், சிவன் அருள் கணினி தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்களான எஸ்.எம்.பர்ஜான் மற்றும் திருமதி.எஸ்.சானுஜா ஆகியோரும், சிவன் அருள் கணினி தொழிற்பயிற்சி நிலைய பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சிவன் அருள் பவுண்டேசன் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் 60 மாணவர்களுக்கான NVQ தர சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையினை லண்டனில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் ரீ.பாலேந்திரா அவர்கள் வழங்கியதுடன் இந்த சிவன் அருள் கணினி நிலைய பாடநெறிகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதற்கும் இவரே தொடர்ந்தும் நிதி உதவி வழங்கி பெரும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




































































Powered by Blogger.