மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா!!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையமானது கடந்த 12 வருடங்களுக்கு மேலாக மாவட்டத்தின் சமூக மேம்பாடு மற்றும் இன நல்லுறவை ஏற்படுத்தல் போன்ற சமூகம் சார் நல திட்டங்களை அமுல்படுத்தி வரும் நிலையில் மேலும் தமது சேவையினை விரிவுபடுத்தி மக்கள் தம்மிடம் இலகுவாக சேவையினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு நகரில் அமையப்பெற்றுள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் மேல் தளத்தில் இன்றைய தினம் (03) திகதி மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாமிய சாமஸ்ரீ தேசமான்ய உ.உதயகாந்த் தலைமையில்  இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஆகியோரும் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார், அகில இலங்கை சமாதான நீதிவானும் பிரபல தொழிலதிபருமாகிய பீ.நல்லரெத்தினம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள், பிரதான இணைப்பாளர்கள், பிரதேச இணைப்பாளர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பிரதான இணைப்பாளர்கள் உள்ளிட்ட அமைப்பின் பிரதேச இணைப்பாளர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அமைப்பினால் வழங்கப்படும்  அடையாள அட்டை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், சங்கத்தின் கடந்த கால செயற்பாடுகளுக்கு (2025) பூரண ஒத்துழைப்பு வழங்கிய நிர்வாக சபை உறுப்பினர்களான என்.நவதாசன், ஜனாப் அகமட் சின்னலெவ்வை ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், சங்கத்தின் வளர்ச்சிப்பாதைக்கு பெருமளவான உதவியினை வழங்கிவரும் பிரபல தொழிலதிபரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய பீ.நல்லரெத்தினம் அவர்களும் அமைப்பின் உபதலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





























Powered by Blogger.