திருத்தந்தையின் பிரதிநிதியின் பங்கேற்புடன் சதாசகாயமாதா திருத்தல திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!


வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா  திருத்தலத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான திருவிழா இன்று (03) திகதி கொடியிறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது.

கடந்த 25.08.2023 திகதி திருத்தல நிருவாகி அருட்பணி ஈ.ஜேமில்ட்டன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட திருவிழாவின் நவநாட்கால வழிபாடுகள் இடம்பெற்றதுடன், திருவிழாவிற்கான பாதயாத்திரை நேற்று  (02) திகதி காலை 5 மணிக்கு புளியந்தீவு  புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற திருப்பலியைத் தொடர்ந்து வவுணதீவினுடாகவும், செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்தில் காலை 5 மணிக்கு இடம்பெற்ற திருப்பலியைத் தொடர்ந்து கரடியனாறு ஊடாகவும் பல்லாயிரக்கணக்கான அன்னையின் அடியார்கள் பாதயாத்திரையாக திருத்தலத்தை சென்றடைந்துள்ளனர்.   

பெருவிழா கூட்டுத் திருப்பலியினை  திருத்தந்தையின் இலங்கைக்கான  பிரதிநிதி பேராயர் பிறையன் உடைக்வே மற்றும் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அகியோர் இணைந்து காலை 7.00 மணிக்கு ஒப்புக்கொடுத்ததனைத் தொடர்ந்து அன்னையின் சுற்றுப்பிரகாரம் இடம்பெற்று, அன்னையின் ஆசீர்வாதத்துடன் கொடியிறக்கம் நடைபெற்று  திருவிழா நிறைவுவடைந்துள்ளது.

அன்னையின் பக்த அடியார்களின் நன்மை கருதி திருவிழா காலங்களில் போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் மற்றும் பாதுகாப்பு, மின்சாரம் வழங்கள் போன்ற விடங்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

























Powered by Blogger.