எமது நாட்டு ஜனாதிபதியை நாம் நம்புகின்றோம் - அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் கணேசன் அனிரன் நம்பிக்கை!!

எமது நாட்டு ஜனாதிபதியை நாம் நம்புகின்றோம் - அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் கணேசன் அனிரன் நம்பிக்கை!!

எமது நாட்டினுடைய ஜனாதிபதியை நாம் நம்புகின்றோம் எமது விடையத்தில் அவர் நியாயமானதொரு தீர்வினை தருவாரென நம்புகின்றோம் என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் கணேசன் அனிரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒன்று கூடல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (15) திகதி  அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் கணேசன் அனிரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த ஒன்று கூடலின் நிறைவில் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கணேசன் அனிரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது நாட்டில் குறிப்பிட்ட வாரத்துக்கு முன்பாக பேசுபொருளாக காணப்பட்ட ஒரு விடயம், பாடசாலைகளில் இணைக்கப்பட்டு இருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆசிரியர் நியமனம் தொடர்பாக  தலைநகரில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டம்.

இந்த உண்ணாவிரத போராட்டம் உண்மையிலேயே பாடசாலைகளில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு நிரந்தர ஆசிரியர் நியமனம் வேண்டி பாடசாலைகளில் இலங்கை பூராகவும் 16,600 பட்டதாரிகள் இணைக்கப்பட்டு அவர்களுக்கு நியமனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இடம்பெற்ற ஒரு நியாயமான போராட்டமாகவே அது இருந்தது.

கடந்த மூன்று அரசாங்கங்களையும் தாண்டி ஏமாற்றப்பட்டு வந்த குறித்த பட்டதாரிகள் தற்போதைய ஜனாதிபதியிடம் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி இந்த போராட்டத்தை தொடர்ச்சியான முறையில் மேற்கொண்டு வந்திருந்தனர்.

அந்த வகையில் கடந்த மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி  செயலகத்திற்கு முன்பாக பட்டதாரிகள் ஒன்றியம் சார்ந்து இருக்கின்ற பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். பல உறவுகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர், அதில் சிலர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

எமது நாட்டினுடைய கௌரவ ஜனாதிபதி அவர்கள் குறித்த தரப்பினரோடு பேச்சுவார்த்தையினை மேற்கொண்டிருந்தார். அந்த பேச்சுவார்த்தையிலே நானும் பட்டதாரி ஒன்றியத்தின் தலைவர் என்ற வகையில் கலந்து கொண்டிருந்தேன். எமது பிரச்சினை தொடர்பாக பல விடயங்கள் அங்கு நாட்டினுடைய ஜனாதிபதி உடன் கலந்துரையாட கூடியதாக இருந்தது. அந்த கலந்துரையாடல் தொடர்பாக உண்மையிலேயே பல தவறான செய்திகள் வெளிவந்திருந்தது.

பாடசாலையில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி ஊத்தியோகத்தர்கள் போட்டி பரிட்சை ஒன்றின் ஊடாகவே ஆசிரியர் நியமத்திற்கு ஒத்துக் கொண்டு விட்டார்கள் என்ற விடயம் பல ஊடகங்களில் வெளிவந்திருந்தது. உண்மையிலேயே இந்த ஊடகங்கள் தெரிவித்த கருத்து வேறு அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் வேறு,  உங்களுக்கு தெரியும் தற்போது வெளியேற்றப்பட்ட பட்டதாரிகள் அதிகம் இருக்கின்றார்கள் அது மாத்திரமல்ல ஆசிரியர் போட்டி பரீட்சைக்கு பங்குபற்ற கூடிய பட்டதாரிகளாக இருந்தாலும் அவர்கள் திணைக்கள ரீதியாக ஏனைய இடங்களில் பணியாற்றினாலும், அனைவரையும் ஒன்றிணைத்து போட்டி பரிட்சை ஒன்றின் ஊடாக ஆசிரியர் நியமனத்தினை வழங்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் கருத்துக்கள் கலந்துரையாடலில் இருந்தாலும் பாடசாலைகளில் கடந்த ஆறு வருடங்களையும் தாண்டி ஆசிரியப் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் குறித்த வாய்ப்பு கிடைப்பதற்கான ஒரு வழிமுறையினை அமைத்துக் கொடுப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருக்கின்றார். அதற்கான ஒரு பொறிமுறையினை தயாரித்து எங்களுக்கு சரியான ஒரு தீர்வு வழங்கப்படுமென வாக்குறுதி வழங்கப்பட்டது. 

எமது நாட்டினுடைய கௌரவ ஜனாதிபதி பல விடயங்களை எமது நாட்டில் செய்து கொண்டிருக்கின்றார். அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அது மாத்திரம் அல்லாமல் நேரடியாக இந்த விடயத்தில் எமது நாட்டினுடைய ஜனாதிபதி தலையிட்டு இந்த பிரச்சனைக்காக நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியவரான தீர்வினை தருவதாக கூறியதனால் அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டு காத்திருக்கின்றோம்.  அவருடைய வாக்குறுதியை நம்பியிருக்கின்றோம். 

எமது நாட்டினுடைய ஜனாதிபதி சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் எங்களுடைய ஆர்ப்பாட்டங்களாக இருக்கட்டும், போராட்டங்களாக இருக்கட்டும் அரசுக்கு வழங்கப்படுகின்ற அழுத்தங்களாக இருக்கட்டும், எம்முடன் இருக்கும்  மூவினத்தையும் சேர்ந்தவர்களை கொண்டு அவற்றை மீண்டும் முன் எடுத்து செல்வோம் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

ஆனால் அதற்கு வாய்ப்பு இருக்காது என நம்புகின்றோம். நாட்டினுடைய ஜனாதிபதி பல விடயங்களை கூறி அவற்றை செயல்படுத்தி வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

அதேபோன்று அவர் எங்களுடைய பிரச்சனைக்கான தீர்விணையும் கூறியதற்கு அமைவாக நிறைவேற்றித் தருவார் என்னும் அடிப்படையில் அதேபோல சில சமூக வலைத்தளங்களுக்கும் சில தரப்பினர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தை கூறிக் கொள்ளலாம் என நினைக்கின்றேன் குறிப்பாக எங்களுடைய நியமனம் கிடைப்பதற்கு பல சிறப்பினர் எதிர்ப்பினை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் நாம் கூறிக் கொள்கின்ற விடயம்,  வேலையற்ற பட்டதாரிகளுக்கான  நியமனங்களுக்கு ஏங்களாலும் ஒத்துழைப்பு வழங்க முடியும், எங்களுடைய சங்கத்திடம் அவர்கள் கேட்டால் அவர்களுக்காகவும் நாங்கள் போராட்டத்தில் இறங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்பதையும் வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

ஒரு விடயத்தை ஆராயாமல் குறுத்து தரப்பினர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று சொன்னால் அவர்களுடைய பாதிப்பு என்ன என முழுமையாக ஆராய்ந்து அதற்குரிய தீர்வுகளை இந்த படித்த சமூகம் வழங்க வேண்டும் அது மட்டுமில்லாமல் உங்களுக்கு தெரியும் இலங்கையிலே பரீட்சையை மையப்படுத்திய கல்வி முறைமை என்பதனால் அதனை பயன்படுத்தி காசை உழைக்கும் மாபியாக்களே அதிகமாக காணப்படுகின்றனர். 

இந்த மாபியாக்களால் முடிந்தால் உங்களது படிப்பினை வைத்து உங்களுடைய கல்வித் தரத்தினை வைத்து எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவதை தவிர பட்டதாரிகளுடைய வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் எனவும் இதன்போது கேட்டுக் கொண்டார்.




Powered by Blogger.