இன்று நள்ளிரவு (05) முதல் அமுலாகும் வகையில் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய,
12.5kg சிலிண்டர்: ரூ. 145 இனால் அதிகரிப்பு
5kg சிலிண்டர்: ரூ. 59 இனால் அதிகரிப்பு
அதன் அடிப்படையில்,
12.5kg: ரூ. 3,690 இலிருந்து ரூ. 3,835 ஆக ரூ. 145 இனால் அதிகரிப்பு
5kg: ரூ. 1,476 இலிருந்து ரூ. 1,535 ஆக ரூ. 59 இனால் அதிகரிப்பு
கடந்த ஓகஸ்ட் மாதம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் செய்யப்படாது என அறிவிக்கபிபட்டிருந்தது.
அதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் 12.5kg சிலிண்டர்: ரூ. 300 இனால் குறைக்கப்பட்டதோடு, 5kg சிலிண்டர்: ரூ. 120 இனால் குறைக்கப்பட்டிருந்தன.
ஏப்ரல் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
12.5kg சிலிண்டர்: ரூ. 1,290 இனால் குறைப்பு (ரூ. 3,990)
5kg சிலிண்டர்: ரூ. 516 இனால் குறைப்பு (ரூ. 1,596)