மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தமிழர் பாரப்பரியத்தை பறைசாற்றி நிற்கும் தைப்பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய "சாமஸ்ரீ தேசமானிய" உ.உதயகாந்த் தலைமையில் மட்டக்களப்பு கோவில் போரதீவு வெள்ளைநாவலம்பதி ஶ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் விழாவின் முதல் நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான இணைப்பாளர் எம்.கோபிநாத் அவர்களது வீட்டில் இருந்து பூசை வழிபாடுகளின் பின்னர் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் புதிர் உள்ளிட்ட பூசைப் பொருட்கள் ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தலைவர் உள்ளிட்ட மீயுயர் குழு உறுப்பினர்களினால் பொங்கல் பானைக்கு புத்தரிசியிடப்பட்டு பொங்கல் பொங்கி ஆலயத்தின் மூல மூர்த்திக்கும் சூரிய பகவானுக்கும் படைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.
சூரிய பகவானுக்கும் உழவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இடம் பெற்ற தமிழர் பாரம்பரிய பொங்கல் விழாவில் சங்கத்தின் உப தலைவர் யூ.ஆதம், செயலாளர் ரீ.லெட்சுமிகாந்தன், நிர்வாக சபை உறுப்பினர்கள், மீயுயர் குழு உறுப்பினர்கள், கணக்காய்வாளர் வீ.தவராசா, மாவட்ட பிரதான இணைப்பாளர் எம்.கோபிநாத், மட்டக்களப்பு தொகுதி இணைப்பாளர் பொறியியலாளர் ரீ.மயூரன், பட்டிருப்பு தொகுதி இணைப்பாளர் ஐ.ரகுபரன், பிரதான இணைப்பாளர்கள், இணைப்பாளர்கள், பொது நிலையினர் என பெருமளவானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















