உலக தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விழிப்புணர்வு நடைபவனிப்பேரணி மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சசிந்த மற்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பு.சோதிராஜ் தலைமையில் கதிரவெளி கதிரா எகெடமி வரவேற்பு மண்டபத்தில் இன்று (10) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன், மாவட்ட தொழுநோய் வைத்திய பொறுப்பதிகாரி திருமதி.லிபோஜிதா மற்றும் தொழுநோய் பொதுச் சுகாதார பரிசோதகர் சோ.தீபகுமரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
தொழுநோய் தொடர்பாக பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் கதிரவெளி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் கட்டுமுறிவு சந்தி தொடக்கம் திருகோணமலை பிரதான வீதி ஊடாக கதிரா எகெடமியை வந்தடைந்து அங்கிருந்து கண்காட்சி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
தொழு நோயாளர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதை ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளில் இப் பேரணி இடம் பெற்றது.
இந் நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன் , பிரதேச சபை செயலாளர் குயின்ரஸ் , கதிரவெளி பாடசாலை அதிபர் இராமசந்திரன் மற்றும் வாகரை பாடசாலை அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தாய்மார் கழக உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாடசாலையின் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
