வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் இளம் தொழில் முனைவோருக்கு வட்டியற்ற கடன் உதவி!!

மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் இளம் தொழில் முனைவோருக்கு வட்டியற்ற கடன் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமாகிய தேசபந்து முத்துக்குமார் செல்வராசா தலைமையில் குறித்த நிகழ்வு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் இன்று (12) திகதி இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் செயலாளர் பொறியியலாளர் அன்டன் தம்பிமுத்து, பொருளாளர் சண்முகம் தங்கராசா, மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் மீயுயர் பீட உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள், 
சம்மேளனத்தின் மீயுயர் பீட உறுப்பினரும் மட்டு சுயதொழில் முயற்சியாளர் சம்மேளனத்தின் தலைவருமாகிய உ.உதயகாந்த் (JP) உள்ளிட்டோர் கலந்து கொண்டு வட்டியற்ற கடன் உதவிகளை ஐந்து இளம் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கி வைத்துள்ளனர்.

இதன் போது ஐந்து சுயதொழில் முயற்சியாளர்களுக்கும் சுமார் 7 இலட்சம் ரூபாயினை வட்டியற்ற கடனாக வழங்கியதுடன், இவ்வாறாக வழங்கி வைக்கப்பட்ட கடனுதவியினை மூன்று மாதங்களின் பின்னர் இலகு கடனுதவியாக மீள செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் இதன் போது தெரிவித்ததுடன், குறித்த கடனுதவியை பெற்றுக் கொண்ட சுயதொழில் முயற்சியாளர்கள் இதன் போது மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் தமக்கு பல்வேறுபட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்ததுடன், தமது நன்றிகளையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.