கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் கடமையை ஏற்பு!!


கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை 8:30 சுப வேளையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில், அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மருத பாண்டி இராமேஸ்வரன்,  கோவிந்தன் கருணாகரன் உட்பட உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.


Powered by Blogger.