பொரள்ளையில் துப்பாக்கி சூடு!!


பொரள்ளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் இன்று (20) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், குறித்த நபர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் 53 வயது மதிக்கத்தக்கவர் எனவும், களனி பகுதியில் வசிப்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவராத நிலையில், தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Powered by Blogger.