சூறாவளியாக தீவிரமடைந்துள்ள ஆழ்ந்த தாழமுக்கம்! திருகோணமலைக்கு கிழக்காக மையம் கொண்டுள்ளதாக தகவல்

 தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் இந்த விடயத்தை தெரிவித்துளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இச்சூறாவளிக்கு மென்டோஸ் (Mandous) என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த சூறாவளியானது திருகோணமலையில் இருந்து கிழக்காக 370 கிலோமீட்டர் தூரத்திலும் நெட்டாங்கு 9.2 பாகை வடக்காகவும் அகலங்கு 84. 6 பாகை கிழக்காகவும் மையம் கொண்டுள்ளது என கூறியுள்ளார். 

இந்த சூறாவளி காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Powered by Blogger.