விசேட கொடுப்பனவு வழங்க முடியாது: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

 இலங்கை மின்சார சபை ஊழியர்கள் எவருக்கும் இம்முறை விசேட கொடுப்பனவு வழங்க முடியாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் அதன் ஊழியர்களுக்கு வருட இறுதியில் பெரும் தொகை விசேட கொடுப்பனவு வழங்கப்படும் செயற்பாடு நடைபெற்றுள்ளது.

எனினும் இம்முறை அவ்வாறு வழங்க முடியாது என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, தனது அனுமதியின்றி எந்தவொரு தரப்புக்கும் மின் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளார்


Powered by Blogger.