வரலாறு காணாத யுத்தம்! மிகப்பெரிய தீப்பரவல்: அதிர்ச்சியளிக்கும் பாபா வாங்காவின் கணிப்புக்கள்

 ஒரு நாடு தன்னுடைய நாட்டு மக்கள் மீதே உயிரியல் ஆயுதத்தை(கிருமி) பயன்படுத்தும் என்னும் இதன் காரணமாக பல உயிர்கள் பலியாகும் என்றும் பல்கேரியன் நாட்டை சேர்ந்த கண் தெரியாத பெண் தீர்க்கதரிசி பாபா வாங்கா  கணித்துள்ளார்.  

உலகத்தில் எந்த எந்த நாடுகளில் எந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நபர்கள் கணித்து வருகின்றனர்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக பாபா வாங்கா காணப்படுகின்றார். 

இந்தநிலையில், 2022 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில், 2023ஆம் ஆண்டு  உலகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப் போகின்றது என்பதை பாபா வாங்கா கணித்துள்ளார். 

அத்துடன்,  எதிர்காலத்தை கணிக்கும் பல தீர்க்கதரிசிகள் அடுத்த வருடம் என்ன நடக்கப் போகின்றது என்பதை கணித்துள்ளனர்.  

இதேவேளை, அடுத்த வருடம் உலகத்தில் கோதுமையின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிகரிக்கும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.  

அத்துடன், பூமிக்கு வேற்றுக் கிரகவாசிகள் வரக்கூடும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். 

இதேவேளை, அடுத்த வருடம் நடைபெறக் கூடும் என்று வெளியாகியுள்ள சில பொதுவான கணிப்புக்களின் படி, இதுவரை இல்லாத மிகப் பெரிய யுத்தம் ஒன்று 2023ஆம் ஆண்டு ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், புதிய ஒரு ஆட்சிமுறை உலகத்தில் தோற்றம் பெறும் எனவும் கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.  கடந்த காலங்களில் மன்னர் ஆட்சிக்காலம் இருந்தது, அது மறைந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட  பிரதிநிதிகள் ஆட்சி செய்யும் முறை வந்தது. எனினும் அடுத்த வருடம் இந்த ஆட்சி முறை மாற்றமடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம் ஒன்றில், வரலாறு காணாத மிகப் பெரிய தீப்பரவல்  அடுத்த வருடம் ஏற்படும் என்றும் கணிப்புக்கள் வெளியாகியுள்ளன. Powered by Blogger.