நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கிழக்குத் தமிழர்களிடையே அதிகம் பேசப்பட்ட விடயம் கல்முனைப் பிரதேச செயலக விடயம்.
ஜனாதிபதி கோத்தாபாஜ தரப்பினால் தாம் ஜனாதிபதியானால் கல்முனை தமிழ் பிரதேச செயலாகம் தரமுயர்த்தப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவாதங்களை நம்பி அதிகமான தமிழ் மக்கள் கோத்தாபாஜவிற்கு வாக்களித்திருந்தனர்.
இவ்விடயம் தீர்த்து வைக்கப்படும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் , வியாளேந்தரன் அவர்களும் மேடைகளில் முளங்கினர்.
தேர்தல் முடிந்து பத்தாவது நாளான இன்றுவரை இவ்விடயம் தொடர்பில் எவருமே வாய்திறக்கவில்லை. ஆனால் அமைச்சுப்பதவியை பெறுவதிலும், ஏனைய பதவிகளைப் பெறுவதிலுமே மும்முரமாக இருக்கின்றனர்.
இவ்விடயம் வழமைபோல் தேர்தல்கால வாக்குறுதிகள் போல் அல்லாமல் தீர்வுகாணப்படவேண்டும். இல்லையேல் அடுத்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரே இவ் வீடியோவை வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது