ஸ்ரீலங்காவில் அமைந்துள்ள அனைத்து இராணுவ முகாம்களிலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச இலட்சனை மற்றும் இராணுவ இலட்சனை ஆகியவற்றை காட்சிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தப்பத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை தொடர்பில் அனைத்து இராணுவ முகாம்களையும் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்