பெண்ணிடம் செருப்படி வாங்கிய சம்மந்தர் ! (படங்கள்)தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றிருந்த நிலையில் கூட்டம் இடம்பெறும் இடத்தை முற்றுகையிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் வாகனத் தொடரணி மீது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைச் சேர்ந்த தாயொருவர் செருப்பைக் கழற்றி எறிய முற்பட்ட போது பொலிஸார் அவரை மடக்கித் தடுத்துள்ளனர்.
வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முடிவெடுப்பதற்காகக் கூடியிருந்தது.

இதன்போது வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூட்டம் இடம்பெறும் இடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
எனினும் பொலிஸார் அவர்களைக் கூட்டம் இடம்பெறும் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. இந் நிலையில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது கூட்டம் முடிவடைந்து வெளியேறிய சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் வாகனத் தொடரணி மீதே குறித்த தாய் செருப்பைக் கழற்றி எறிய முற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.