பிரபாகரனின் ஆயதத்தால்
பெற முடியாததை சம்மந்தர் தனது புத்திசாலித்தனத்தால் பெற்று வருகின்றார் என அமைச்சர்
மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு
வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
13 அம்சக் கோரிக்கைகளை
ஐந்து தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ளன. இதனை நான் வரவேற்கின்றேன். இவ்வாறு கோரிக்கைகளை
முன்வைத்தாவது தமிழர்களின் உரிமைகளைப் பெற பிரபாகரன் முயற்சிக்கவில்லை. ஆனால் சம்மந்தன்
அவர்களின் முயற்சி பாராட்டப்படவேண்டியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இக் கருத்தானது
விடுதலைப் புலி ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
