நாடாளுமன்றத்தில் மோதல் சில உறுப்பினர்கள் காயம்! வெளியேறிய சாபநாயகர்


நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற குழப்பநிலை மற்றும் அடிதடி காரணமாக சில உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய நிலையில் பிரதமர் தனது உரையை நிகழ்த்தினார்.


அந்த உரையை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் லக்ஷ்மன் கிரிஎல்ல தனது உரையை ஆரம்பித்த போது அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.


அதனை தொடர்ந்து குழப்பமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.


அதன் பின்னர் ஆர்ப்பாட்டம் மற்றும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் உறுப்பினர்கள் சிலர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


காயமடைந்த உறுப்பினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


மோதல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், சாபநாயகர் , மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளார்.Powered by Blogger.