வலுவடைந்து வரும் கஜா: இலங்கையின் சில பகுதிகளில் பாதிப்பு உணரப்படலாம்


கஜா சூறாவளி வலுவடைந்து வரும் நிலையில் அதன் பாதிப்பு இன்று இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிலும் குறிப்பாக, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் உணரப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தற்பொழுது முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரையோர பகுதிகளில் பனி மூட்டமாக காணப்படுகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


மேலும், முல்லைத்தீவு கரையோரப்பகுதி மீனவர்கள் இன்று கடற்தொழிலுக்கு செல்லாத நிலையில் வாடிகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுPowered by Blogger.