நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்குமாறு மைத்திரிக்கு அழுத்தம் கொடுக்கும் மஹிந்த

நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்குமாறு பிரதமராக செயற்படும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதித் தீர்ப்பு கிடைக்கும் வரை, மீண்டும் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்குமாறு மஹிந்த, மைத்திரியிடம் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் இந்த நேரத்தில் அவ்வாறான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளாமல் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளனர்.


இவ்வாறான சந்தர்ப்பத்தில் மீண்டும் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளதாக சட்டத்தரணி விஜேநாயக்க பிபிசி செய்தி சேவையிடம் குறிப்பிட்டுள்ளார்.Powered by Blogger.