அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடக கையளிப்பு!!

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்னாண்டோ அவர்களினால் கையளிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வகையிலேயே  குறித்த சுகாதார பொருட்கள் இன்றைய தினம் அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்னாண்டோ அவர்களினால் மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட், மாவட்ட செயலக அதிகாரிகள், பாஸ்டர் பத்திநாதன், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்னாண்டோ அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய பேரருட்கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானபிரகாசம் அவர்களை மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடிய போது குறித்த சுகாதார பொருட்களை மன்னார் மாவட்டத்திற்கு வழங்கியமைக்காக மன்னார் மக்கள் சார்பாக தமது நன்றிகளை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.