அனுர அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும் - ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவிப்பு!!

இருபது வருடங்கள் அனுர அரசாங்கம் நீடிக்கும் அதை யாராலும் மாற்ற முடியாது என்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று கல்முனையில் இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாட்டையே சிலர் அரசியல் ரீதியாக முன்னெடுத்து வருகின்றனர்.

வைத்தியர் சுகுணன் முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டாம் என்றே சொல்லியிருந்தார். அவரை பதவி விலக்க வேண்டும் என்று முயுப்பூர்ரகுமான்  சொல்வதற்கு அவருக்கு தகுதி இல்லை.

சஹரானுக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் என்ன தொடர்பு, ஹிஸ்புல்லா சஹரானை கட்டிப்பிடித்த நிகழ்வு நடைபெற்று ஒரு மாதத்திற்குள்ளேயே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது. அது தொடர்பாக நான் காத்தான்குடி பொலிசில் முறைப்பாட்டை பதிவு செய்தேன் ஆனால் இதுவரை எந்தவெரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஹஸ்புல்லா காளி கோயில் காணியை அபகரித்தது, நீதிபதியை மாற்றியது தொடர்பாக அவரே அவரது வாயால் சொன்னதை மின்னல் ரங்காவின் நிகழ்வில் சொன்னதை நாங்கள் பார்த்தோம். இதற்கெல்லாம் சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலை கொடுப்பதற்கு சுப்பிரமணியம் சிவானந்தராசா  ஏன்பவர் காணியை மட்டக்களப்பு ஐயங்கேணியில் காணியை தயார்படுத்திய போது அதை ஹிஸ்புல்லாவின் ஆதரவுடன் இவரது காணியை கொள்ளையிட்டுள்ளார்கள். இதற்காக இவர் ஏறாவூர் பொலிசில் முறைப்பாடு செய்தும் இவருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஹஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு 500 ஏக்கர் எப்படி வழங்கப்பட்டது. யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவரது பிழைகளை மறைப்பதற்காக அவர்களுடன் சேர்ந்து கொள்வது வழமையாக இருந்து வந்தது உண் மை.

ஹிஸ்புல்லாக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்து வந்தது? அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்காக ஆறு கட்சிகள் இணைந்து கொண்டிருந்தால் நல்ல விடையம் ஆனால்  இதெல்லாம் தமிழ் மக்களை பேய்க்காட்டி கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களுக்கு ஒப்படைப்பதற்கே இந்த ஒன்றினைவை ஏற்படுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பில் பிச்சை எடுப்பதற்கு ரோஸ்டர் போட்டுள்ள நிலையையே தமிழ் அரசியல் தலைமைகள் ஏற்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லாவிற்கு எதிராக அரசாங்கமும் CID யும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட் டில் நாங்கள் சட்டத்தின் ஊடாக உச்ச நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார். 

Powered by Blogger.