இளம் சமூக செயற்பாட்டாளர் கிருஷாந்திற்கு கௌரவ கலாநிதி பட்டம்!!

மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் சமூக செயற்பாட்டாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய "சமூக ஜோதி" இருதயராஜா கிருஷாந்த் அவர்களுக்கு சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிகு பங்களிப்பினை கௌரவிக்கும் வகையில் கௌரவ கலாநிதி [Honorary Doctorate in Management] பட்டம்  வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த கௌரவப் பட்டமானது அமெரிக்காவினை (USA) தளமாக கொண்டு இயங்கும் பல்கலைக்கழகம் ஒன்றினால் 2026 ஜூலை 20 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சமூக நலன், மனிதாபிமானப் பணிகள், சமூக மேம்பாடு மற்றும் பொதுச் சேவைகளில் தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இக்கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

சமூக சேவையில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் கலாநிதி இருதயராஜா கிருஷாந்த் அவர்களின் சேவைக்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரமாக இந்தக் கௌரவம் கருதப்படுகிறது.

இவர் மட்டக்களப்பு பாலமீன் மடு வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினராகவும், மட்டக்களப்பு YMCA யின் வாழ்நாள் உறுப்பினராகவும் மற்றும் Lions Club of Batticaloa Heritage For humanity அங்கத்தவராகவும் மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினராகவும் மட்டக்களப்பு உளவியல் அலோசனை மையத்தின் இணைப்பாளராகவும் மற்றும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் தன்னாலான சிறந்த சேவைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் அல்லது எல்லா இடங்களிலும்  செய்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.