53வது லயன்ஸ் கழகத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பில் 2026–2027 ஆண்டிற்கான 53வது லயன்ஸ் கழகத்தின் (Lions Club of Batticaloa) புதிய நிர்வாகப் பொறுப்பேற்பு விழா இன்று (26) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன் ஜி. ஷாஹிர் அஹமட் கலந்து கொண்டு புதிய தலைவராக பால்ராஜ் செல்வராஜ் அவர்களை உத்தியோகபூர்வமாக பதவி பிரமானம் செய்து வைத்தார்.
இதன் போது புதிய நிர்வாகத்தினருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
53வது லயன்ஸ் கழக நிகழ்வின் போது கழகத் தலைவர்கள், உப தலைவர்கள், வலய தலைவர்கள், பிரதி தலைவர்கள், எனைய கழக தலைவர்கள், மாவட்ட மற்றும் துறைசார் தலைவர்கள், பல்வேறு குழுக்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான பதவிகள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தினர், சமூக சேவை, கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இளைஞர் மேம்பாடு மற்றும் மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து, மக்களுக்கு பயனுள்ள பல்வேறு சேவைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த உறுதியளித்தனர்.
நிகழ்வின் நிறைவில், புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், லயன்ஸ் கழகத்தின் சேவைப் பணிகள் மேலும் வலுப்பெற்று சமூக நலனுக்காக தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் முன்னாள் தலைவர் வி.அழகரெத்தினம், முதலாவது பிரதி ஆளுநர் ரீ.ஆதித்தன் இரண்டாவது ஆளுநர் வைத்தியர் யோகநாதன், முன்னாள் தலைவர்கள், லயன் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
















