மட்டக்களப்பு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சார்பில் வருடாந்தம் இடம்பெற்று வரும் சீர் கொண்டு செல்லும் நிகழ்வு!!
மட்டக்களப்பு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சார்பில் வருடாந்தம் இடம்பெற்று வரும் சீர் கொண்டு செல்லும் நிகழ்வு, இவ்வருடமும் இன்று 10.08.2026 திங்கட்கிழமை அதிகாலை 3.55 மணியளவில் பக்தி பூர்வமாக நடைபெற்றது
பாரம்பரிய முறைப்படி இடம்பெற்ற இந்நிகழ்வில், ராமகிருஷ்ணபுரம் ராமகிருஷ்ண மிஷன் துறவியர்கள், பக்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஆலயத்தில் இடம்பெற்ற முதல் பூஜை மற்றும் விசேட வழிபாடுகளில் ராமகிருஷ்ண மிஷன் துறவியர்கள், பக்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இதன்போது, உலக மக்கள் அனைவரினதும் நலன், அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளமான வாழ்வுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
பாரம்பரியத்தையும் ஆன்மிகத்தையும் பேணும் வகையில் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிகழ்வு, மட்டக்களப்பு மக்களின் சமய மற்றும் பண்பாட் டு மரபுகளுடன் பின்னிப் பிணைந்த முக்கிய நிகழ்வாகவும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







