இலங்கை வங்கியின் 87வது ஆண்டு நிறைவு விழா: மட்டக்களப்பு நகரக் கிளையில் சிறப்பான கொண்டாட்டம்!

இலங்கை வங்கியின் 87வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாடு தழுவிய ரீதியில் அனைத்து இலங்கை வங்கிக் கிளைகளிலும் இன்று (03) திங்கட்கிழமை  பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

​அந்த வகையில், மட்டக்களப்பு நகரக் கிளையிலும் 87வது ஆண்டு நிறைவு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

​இவ்விழா வங்கி முகாமையாளர் N.S.  Anura அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வங்கியின் வாடிக்கையாளர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் வங்கிப் பணியாளர்கள் முன்னிலையில் கொண்டாட்ட நிகழ்வுகள் இனிதே இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.