1000 வேல்களுடன் கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை சென்ற குழுவினர் கதிர்காம கந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர்!!
சித்தர்கள் குரல் அமைப்பினால் மட்டக்களப்பு வேலோடு மலை ஆலயத்தில் இருந்து 1000 வேல்களுடன் கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை சென்ற குழுவினர் கதிர்காம கந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர்.
வேலோடுமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் தலைவர் தியாகராஜா சுவாமிகள் தலைமையில் சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கள் ஜீ அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வருடா வருடம் கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி வேலோடுமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கும் பாதயாத்திரையானது அமிர்தகழி மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்து அங்கிருந்து உகந்தை மலை முருகன் ஆலயத்தை சென்றடைந்து அங்கு காண பாதை திறக்கப்பட்டதும் கதிர்காம கந்தன் ஆலய கொடியேற்றத்தினை காண்பதற்கு சென்றடைவது வழமையாக இருந்து வருகின்ற திலையில் இம்முறையும் கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவ கொடியேற்றத்தினை காண்பதற்காக 1000 வேல்களை தாங்கி காணகத்தின் ஊடாக பயணித்த சித்தர்கள் குரல் அமைப்பின் பக்தர்கள் கதிர்காம கந்தன் ஆலயத்தை வந்தடைந்து கொடியேற்ற நிகழ்விலும் கலந்து கொண்டதுடன் தமது நேர்த்திகளையும் நிறைவேற்றியதுடன், காணத்தின் ஊடாக பயணித்த 6 நாட்களும் யாக பூசைகள் மேற்கொண்டு இறை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.





