புனித அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலயத்தின் 20வது வருடாந்த பெருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!

மட்டக்களப்பு - பனிச்சையடி புனித அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலயத்தின் 20வது வருடாந்த பெருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை (30.08.2026) திகதி கொடியிறக்கத்துடன் பக்தி பூர்வமாக நிறைவடைந்துள்ளது.

ஆலயத்தின் 20வது திருவிழாவானது கடந்த 21.08.2026 திகதி பங்குத்தந்தை அருட்பணி சீ.வின்செஸ்லோஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமாகி நவநாட் திருவிழாக்கள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து 29.08.2026 திகதி சனிக்கிழமை அன்னையின் திருச்சொரூப பவனியானது ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி, திராய்மடு மற்றும் பனிச்சையடி ஆகிய கிராமங்களில் வழமையான வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

அத்னைத் தொடர்ந்து கடந்த  30.08.2026 திகதி ஆலயத்தின் 20 வது வருடாந்த திருவிழா திருப்பலியினை அருட்பணி ஏ.ஏ.நவரெட்ணம் அடிகளாருடன் அருட்பணி. கிறிஸ்டிராஜ் அடிகளார் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி.சீ.வின்செஸ்லோஸ் அடிகளாரும் இணைந்து ஒப்புக்கொடுத்திருந்தனர். 

திருவிழா திருப்பலியினை பங்கின் பங்கு மேப்புப்பணி சபையினர் சிறப்பித்ததுடன், திருப்பலியின் பின்னர் அன்னை மரியாளுடைய திருச்சுரூபம் ஆலயத்தை சுற்றி பவனியாக கொண்டுவரப்பட்டு இறுதி ஆசீரும் வழங்கப்பட்டதுடன், பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.















Powered by Blogger.