மட்டக்களப்பில் பொங்கலுக்கான பொருட்களை வழங்கி உதவிய சமூக செயற்பாட்டாளர் இன்பநாயகம் ரகுபரன்!!

சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் விழா அண்மித்துள்ள நிலையில் தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளரும் மட்டு சுயதொழில் முயற்சியாளர் சம்மேளனத்தின் ஆலோசகரும், அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய இன்பநாயகம் ரகுபரன் பொங்கல் பொங்குவதற்கான பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் அங்கத்தவர்களான பெண் தலைமை தாங்கும் 11 குடும்பங்களுக்கு சுமார் 2000/= பெறுமதியான குறித்த உதவிகளை வழங்கி வைத்துள்ளார்.

மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான உ.உதயகாந்த் (JP) தலைமையில் இடம்பெற்ற குறித்த உதவிகளை வழங்கும் நிகழ்வில் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி ஆர்.கோகிலாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.














Powered by Blogger.