பதுளை - மடுல்சீமை பகுதி மக்களுக்கு மட்டக்களப்பில் இருந்து பல இலட்சம் பெறுமதியான நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!!
கோவில் போரதீவை சேர்ந்த அமரத்துவம் அடைந்த மார்க்கண்டு பாக்கியம் மற்றும் மனோன்மணி நினைவாக அவர்களின் குடும்ப உறவுகள் பதுளை மாவட்டம் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுல்சீமை எனும் கிராமம் மற்றும் அதனை அண்டிய, வட்டவத்தை தமிழ் பாடசாலை மற்றும் வேவத்தை தமிழ் சிங்கள கலவன் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு சுமார் 6 லட்சம் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் ( கற்றல் உபகரணங்கள்) மற்றும் படுக்கை விரிப்புகள், பாய் மற்றும் ஆண்,பெண் அத்தியாவசிய உடைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போரதீவுபற்று பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் ஆகிய மகேஸ்பரம் கோபிநாத் மற்றும் சமூக சேவையாளர் மார்க்கண்டு பரநிருபசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி கைங்கர்யம் மிக்க சேவையை மனமுவந்து வழங்கி வைத்தனர்.
அதேவேளை கடந்த மாதம் சுமார் 55 லட்சம் பெறுமதியான உதவி திட்டங்களை மேற்படி பிரதேச கிராமங்களில் இவர்கள் வழங்கி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது,




















