மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் - 2026

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்  மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக  கேட்போர் கூட  மண்டபத்தில் இடம்பெற்றது.

சிரேஸ்ட ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளரும், அகில இலங்கை சமாதான நீதிவானும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருமாகிய "சாமஸ்ரீ தேசமானிய" உ.உதயகாந்த் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அமைப்பின் கொடி தலைவரினால் ஏற்றப்பட்டு அமைப்பின் கீதம் இசைக்கப்பட்டு இடம்பெற்ற உறுதியுரையுடன், மௌன இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

சர்வ மத தலைவர்களின் ஆசியுரையினை தொடர்ந்து, செயலாளரின் வரவேற்புரை இடம் பெற்றதனைத் தொடரந்து 2025 ஆண்டு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பான ஆண்டறிக்கை அழிக்கை செய்யப்பட்டதுடன், அமைப்பின் திருத்தம் செய்யப்பட்ட புதிய யாப்பு தலைவரினால் முன்மொழியப்பட்டதுடன் குறித்த யாப்பு அனைவரினாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு யாப்பின் திருத்தத்திற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள்  தொடர்பாக தலைவரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து 30 பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 3500/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இதன் போது வழங்கிவைக்கப்பட்டது.

இதன் போது சமாதான நீதிவான்களை தெளிவூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்ட  செயலமர்வினை சிரேஷ்ட சட்டத்தரணி தர்மதாஸ் மயூரி அவர்கள் பிரதான வளவாளராக கலந்து கொண்டு மிகவும் திறம்பட நிகழ்த்தியதுடன், இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணி  அவர்களின் சமூக செயற்பாட்டினை பாராட்டி கௌரவிக்கும் வகையில் அமைப்பின் நிர்வாக சபையினர்கள் உள்ளிட்ட அமைப்பின் இணைப்பாளர்களினால்  பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். 

குறித்த ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் உபதலைவர் "தேசகீர்த்தி, சமூகஜோதி" எம்.வை.ஆதம், செயலாளர் "தேசகீர்த்தி, சமூகஜோதி" ரீ.லெட்சுமிகாந்தன், பொருளாளர் ஆயுள்வேத வைத்தியர் "தேசகீர்த்தி, சமூகஜோதி" Dr.சபாரெத்தினம் சுதர்சன், உபசெயலாளர் கலாநிதி அருணாசலம் செல்வேந்திரன், நிருவாக சபை உறுப்பினர்களான திருமதி.இ.கோமலேஸ்வரி, கே.சதீஸ்க்குமார், ரீ.தயானந்தம், கே.தவராசா, கே.நடேசன், திருமதி.கிரிஷாந்தி தவப்பிரகாஷ், சட்டத்தரணி எம்.பகீரதன், ஈ.சீதாராமன், அகமட் சின்னலெவ்வை, என்.நவதாசன்,  கணக்காய்வாளர்களான ஏ.தவராஜா, சிவசுப்பிரமணியம் சிவானந்தன் உள்ளிட்ட பிரதான இணைப்பாளர்கள், இணைப்பாளர்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு ஆண்டுப் பொதுக் கூட்டத்தினை சிறப்பித்திருந்தனர்.














Powered by Blogger.