காத்தான்குடி மக்களை அச்சுறுத்தி வந்த 18 அடி நீளமான இராட்சத முதலை இறந்த நிலையில் மீட்பு!!

காத்தான்குடியில் மனிதர்களையும், விலங்குகளையும் விழங்கி நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டிய இராட்சதமுதலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

மட்டக்களப்பு காதாதான்குடி வாவியில் மனிதர்களையும், விலங்குகள், பறவைகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டி வந்த இராட்சத முதலை இன்று (27) காலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

கடந்த மாதம் ஆண் ஒருவரை இழுத்துச் சென்றதுடன், மேலும் இருநபர்களையும் கொன்று உணவாக்கியுள்ளது. பல மாடுகள், ஆடுகள், நாய்கள், பூனை, கோளிகளையும் இழுத்துச் சென்று தனக்கு இரையாக்கியுள்ளது.

குறித்த இராட்சத முதலையைப் பிடிக்க மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களம், காத்தான்குடி நகர சபை ஆகியன இணைந்து வாவியோரத்தில் கூட்டினை பொருத்தி முயற்சிசெய்த போதிலும் முதலையை பிடிக்க முடியாமல்போன நிலையில் இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது

சுமார் 18 அடி நீளமுள்ள இம்முதலையினால் வாவியொரத்தை அண்டி வாழும் மக்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.