சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் நீதிக்கான பேரணி முன்னெடுப்பு!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு  மட்டக்களப்பில் நீதிக்கான பேரணியொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இருந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணியில் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள், மத குருமார், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரநிதிகள் என(300) முன்ணுறிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், 

"வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து நம் அடுத்த தலைமுறையினைப் பாதுகாப்பதற்காக ஒன்றினைவோம்" எனும் தொனிப்பொருளில், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், OMP இல் நீதி இல்லை, இராணுவமே வெளியேறு, OMP ஒரு கண்துடைப்பு, நாங்கள் கேட்பது இழப்பீடோ, மரணச்சான்றிதழோ அல்ல முறையான நீதி விசாரனையே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, எமது நிலம் எமக்கு வேண்டும், கொள்ளையடிக்காதே கொள்ளையடிக்காதே எமது நிலத்தை கொள்ளையடிக்காதே என கோசமெழுப்பியவாறு, பாதாதைகளை ஏந்தி காந்தி பூங்கா வரை பேரணியை முன்னெடுத்திருந்தனர். 

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கும் காந்தி பூங்கா முன்பாக உள்ள நினைவு தூபியில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.




Powered by Blogger.