அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் பொதுக் கூட்டம் நாளைய தினம் அம்பாரையில் இடம் பெறவுள்ளது.
அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் பொதுக் கூட்டமானது தொழிற்சங்கத்தின் தற்போதைய தலைவர் ஏ.ஜீ.முபாறக் தலைமையில் செயலாளர் நாயகம் வீ.பற்குணன் அவர்களது ஏற்பாட்டில் மருதமுனை கமு/அல்-மனார் மத்திய கல்லூரியில் நாளை 24.08.2025 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
குறித்த பொதுக்கூட்டமானது இறை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, இயற்கையெய்திய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, வரவேற்புரை, சென்ற கூட்டறிக்கை முன்னிலைப்படுத்தல், கணக்கறிக்கை முன்னிலைப்படுத்தல், தலைமை உரை, புதிய நிருவாக உறுப்பினர் தெரிவு, சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்தல், பரஸ்பர கருத்து பரிமாற்றமும் மதியபோசனமும் இடம் பெற்று நன்றியுரையுடன் பொதுக்கூட்டமானது இனிதே நிறைவு பெறவுள்ளதுடன், அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களையும் குறித்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.