மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடும் சாந்தியை மடக்கிப் பிடிக்க குழுவாக செயற்படுவதற்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே மேற்படி தீர்மானமா.னது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் கோரிக்கைக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தினை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கந்தசாமி பிரபு தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபோ மண்டபத்தில் (24) திகதி காலை 9.00 மணி முதல் இடம்பெற்றது.
.
குறித்த பிரதேச அபிவித்திக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், Dr.இளையதம்பி ஶ்ரீநாத், மட்டடக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டடக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் உள்ளிட்ட மாநகர சபையின் உறுப்பினர்கள் துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், உதவிப்பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்திருந்தனர்.
இதன் போது கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் அண்மையில் பாடசாலைகளில் உணவு விசமாகிய மை தொடர்பாகவும், சட்டவிரோச கசுப்பு விற்பனையினை தடுத்தல், கிராமிய விதிகள் அமைத்தல் போன்ற கல்வி, சுகாதாரம், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை, மட்டக்களப்பு நகர் பகுதியில் காணப்படும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள், மாநகர சபையினால் அமைக்கப்பட்டுவரும் நூலகம் உள்ளிட்ட மேலும் பல விடையங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், புதிய திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கென அரசினால் 8100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிதியின் ஊடாக பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக
பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கந்தசாமி பிரபு இதன் போது கருத்து தெரிவித்தார்.