சடலத்தை அடையாளம் கான பொதுமக்களிடம் பொலிசார் உதவி கோருகின்றனர்!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் குளம் பகுதி பிரதான வீதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த 21ம் திகதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



இவர் தொடர்பான எவ்விதமான தகவலும் இதுவரை கிடைக்கவில்லையெனவும், சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்நபர் கதிர்காமம் பாத யாத்திரை நடைபயணத்தில் ஈடுபட்டவராக இருக்கலாம் எனவும், வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

புகைப்படத்தில் காணப்படும் நபரை யாரேனும் அடையாளம் காணக் கூடியவர்களாக இருந்தால் அல்லது அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருப்பின், தயவுசெய்து உடனடியாக கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு காத்தான்குடி பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

📞 தொடர்பு எண்:

076 242 8822

➡️ காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு

பொதுமக்கள் உங்களால் முடிந்த அளவு இந்த தகவலை பகிர்ந்துதவுமாறு பொலிசார் கோரிக்கை விடுக்கின்றனர்.

Powered by Blogger.