மட்டக்களப்பு நகரில் பாடு மீன் வீதியிள்ள வீடு ஒன்றின் முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் ஒன்று இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை 12.30 மணியளவில் தீப்பற்றி எரிந்ததையடுத்து தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் போது வேன் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் இருந்து மட்டக்களப்பிலுள்ள உறவினர் வீட்டிற்கு குறித்த வேன் சம்பவதினமான நேற்று இரவு வந்தடைந்து, வேனை வீட்டின் முன் நிறுத்திவிட்டு நித்திரைக்கு சென்றுள்ளநிலையில், வேன் அதிகாலை 1.30 மணியளவில் தீப்பற்றியதை கண்டு உடன் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போதும் வான் முற்றாக தீப்பற்றி எரிந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.