ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயத்தின் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு!!

மட்டக்களப்பு ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்களுக்கான சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி சிறீவதனி டீன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக  மண்முனைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.தில்லைநாதன், பாடசாலையின் மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் வீ.சந்திரசேகரம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை நினைவு கூறும் வகையில் மருத்து நீர் வைத்தல், புத்தாடை அணிதல், கைவிசேடம் வழங்குதல் போன்ற பாரம்பரிய அம்சங்கள் நிகழ்த்தப்பட்டதுடன், முட்டி

உடைத்தல், கயிறு இழுத்தல், ஊஞ்சல் ஆடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


























Powered by Blogger.