கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு LED தொலைக்காட்சியொன்று அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
திரு. திருமதி.கிருஷ்ணவேணி காண்டீபன் தம்பதியினர் தங்களது குழந்தையை NICU விடுதியில் அனுமதித்து 14 நாட்கள் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் எஸ்.என்.ரொசாந்த் அவர்களின் தலைமையின் கீழான வைத்திய தாதிய குழுவானது மிகுந்த அக்கறையான கவனிப்பால் குழந்தை பூரணகுணம் அடைந்து வீடு திரும்பியதன் மகிழ்ச்சியில் வைத்தியசாலைக்கு ஏதாவது அன்பளிப்பு செய்ய வேண்டும் என்ற ஆசையினால் 32" LED TV ஒன்றினை வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.என்.ரொசாந்த் மற்றும் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் ராகுலன் விடுதிப் பொறுப்பு தாதியோ உத்தியோகத்தர் திருமதி கோ. வரதராஜன் ஆகியோரிடம் கையளித்துள்ளனர்.
குறித்த பெற்றோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் அர்ப்பணிப்பான வைத்தியசேவையின் முக்கியத்தையும் மக்களின் வைத்தியசாலையுடனான பங்களிப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.