கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ENT கிளினிக் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம்!!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வின் போது வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

காது, மூக்கு, தொண்டை சாய்சாலையானது வார நாட்களில் காலை 8.00 முதல் 12 மணிவரையும் சனிக்கிழமைகளில் உத்தியோகத்தர்கள் மாணவர்களுக்காகவும் சிகிச்சைக்காகவும் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களில் கிளினிக் இடம்பெறாதெனவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சாய் சாலைக்கு மாதாந்தம் சுமார் 500 நோயாளர்கள் வருகை தருவதுடன்,  வருடத்திற்கு 6000 நோயாளர்கள் சிகிச்சையின் பலனை அனுபவிக்கின்றனர். 

இந்த இடமாற்றமானது எதிர்காலத்தில் மேலும் சிகிச்சைகளை விஷதரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் இதன் போது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.










Powered by Blogger.