கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு!!
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் உள்ளூர் அதிகார சபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் பிரதம உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பான விதிமுறைகள் தொடர்பான விளக்கங்கள் இதன் போது வழங்கப்பட்டன.
தேர்தல் இடம் பெற்று 21 நாட்களில் தேர்தல் செலவீனம் தொடர்பான அறிக்கையினை தேர்தல்கள் திணைக்களத்தில் சமர்பிக்க வேண்டும் அவ்வாறு அறிக்கை சமர்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும் இதன் போது வேட்பாளர்களின் ஐய வினாக்களுக்கான தெளிவூட்டல்கள் பிரதம உதவி தெரிவத்தாட்சி அலுவலரினால் வழங்கப்பட்டன..
இந் நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ. தாஹீர் மற்றும் மாவட்ட தேர்தல் பிணக்குகள் தீர்த்தல் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.