மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா - 2025 நேற்றைய தினம் மட்டக்களப்பில் மிக விமர்சையாக இடம் பெற்றது.
அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான திருமதி.மயூரி ஜனன் தலைமையில் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு விழாவில் அருவி பெண்கள் வலையமைப்பின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள், வாகரை தொடக்கம் வெல்லாவளி வரையான அருவி பெண்கள் வலையமைப்பு கடமையாற்றும் பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த பிரதேச மட்ட குழுக்களின் அங்கத்தவர்கள், சிறு குழுக்களின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு வினோத விளையாட்டுக்களில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெறுமதியான பரிசில்களையும் பெற்றிருந்தனர்.
இதன் போது விநோத விளையாட்டுக்கள், அழகுராணிப் போட்டி, விநோத உடைப்போட்டி உள்ளிட்ட சுவாரஸ்யம் நிறைந்த போட்டிகள் நிகழ்த்தப்பட்டதுடன், வயோதிபர்களும் இளைஞர்களும் இப்போட்டி நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்ததுடன், இதன் போது பாரம்பரிய உணவுப் பண்டங்கள் பகிரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது