தம்பிக்காக உயிரை பறிகொடுத்த அண்ணன் - மட்டக்களப்பில் சம்பவம்!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் இரு தரப்பினருக்கு இடையில் இடம் பெற்ற கைகலப்பில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வீதியோர மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு தரப்பினருக்கு இடையில் இடம் பெற்ற கைகலப்பை தடுப்பதற்காக வாழைச்சேனையில் இருந்து வந்த சகோதரனே குறித்த கைகலப்பின் போது கூறிய ஆயுதத்தினால் குத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இதன் போது  பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிட்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆயித்தியமலை பகுதியை பிறப்பிடமாகவும்
வாழைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட  இளைஞரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிசாரும், மட்டக்களப்பு தடையவியல் பொலிசாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரினால் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

Powered by Blogger.