செய்தி வெளியீடு தொடர்பாக ஊடகவியலாளர் சஜீ பொலிஸாரால் நீண்ட நேர விசாரணை!!

செய்தி வெளியீடு தொடர்பாக ஊடகவியலாளர் சஜீ பொலிஸாரால் நீண்ட நேர விசாரணை இடம் பெற்றுள்ளது.

காத்தான்குடி நகரசபையின் முறைப்பாட்டிற்கு அமைவாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.டி. ரத்னாயக தலைமையில் இது தொடர்பான விசாரணை நேற்று இடம் பெற்றது.

இதன்போது நகரசபை செயலாளர் பாத்திமா றிப்கா, நகர சபை கணக்காளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் நகர சபை தரப்பிலும் மறுதரப்பில் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜீயும் பொலிஸில் ஆஜராகியிருந்தனர்.

ஊடகவியலாளர் சஜீ நகரசபை தொடர்பான செய்தியை வெளியிட்டதில் பொது மக்கள் அதற்கு எழுதிய பிழையான பின்னூட்டங்கள் மற்றும் கருத்துக்கள் என்பவற்றை அழிக்குமாறும், அத்துமீறி நகர சபைக்குச் சொந்தமான பகுதிக்குள் உள் நுழைந்து செய்தி சேகரிப்பு செய்தது தொடர்பாகவும் செயலாளர் றிப்கா நகர சபை சார்பில் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

பொலிஸார் இது தொடர்பாக சஜீயிடம் விளக்கம் கோரினர்,

அதற்கு ஊடகவியலாளர் சஜீ ஊடகப் பொறிமுறைக்கு அமைவாக அது எனது கடமை இல்லை, அதனால் அவற்றை அழிக்க முடியாது என மறுப்பு தெரிவித்ததுடன் பொது இடத்தில் ஹிஸ்புல்லாஹ் மண்டபம் காணப்படுவதால் காட்சிப்பதிவு செய்ய முடியும் என்பதாலும் அவ் இரண்டு முறைப்பாடுகளும் ஏற்றுக் கொள்ள முடியாது என இவ்விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பாக காத்தான்குடி நகரசபையின் ஊடக அடக்கு முறைக்கு எதிராக ஊடகவியலாளர் சஜீ மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.



Powered by Blogger.