மட்டு.சிறையிலிருந்த 16 கைதிகள் விடுதலை!!

இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று (04) திகதி விடுதலை  செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இக்கைதிகள்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.

சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த கைதிகளே
இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.










Powered by Blogger.