(சுதா - சுதந்திர ஊடகவியலாளர்)
காத்தான்குடி நகர சபையின் முறைப்பாட்டுக்கு அமைவாக இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு ஆஜராகுமாறு காத்தான்குடி பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.
காத்தான்குடி நகரப் பிரிவில் மக்களுக்கு மிக அவசியமான தேவைகளை, குறைகளை அடையாளம் கண்டு அவற்றினை உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் மூலமாக வெளிக்காட்டி வரும் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். சஜீ மீது காத்தான்குடி நகர சபை செய்தி வெளியீடு தொடர்பாக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.